ஓசூர் ரயில் நிலையம் முன் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

ஓசூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, ஓசூர் ரயில் நிலையம் முன்பு, விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. அரூர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு தலைமை வகித்தார். முன்னதாக, முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவிடம், ஓசூர் சிறப்பு தாசில்தார் தேன்மொழி போராட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விசாரித்தார். அப்போது, தாசில்தாருக்கும், டில்லிபாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தினர்.

Related Stories: