மாலை அணிந்து விரதம்; திமுக மகளிர் அணி சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா

திருப்பூர்:  திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் 54வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் மத்திய மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில், விஜயாபுரம் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தட்டுகள் வழங்கப்பட்டது.  தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தட்டுகளை வழங்கினார். இதில், கட்சி நிர்வாகி திலக்ராஜ், தெற்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் ரவி, தொண்டரணி அமைப்பாளர் ஆனந்த், 46வது வட்டக் கழக செயலாளர் வெங்கட்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: