7வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்துள்ள சேவூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (47). இவர் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 5.6.2020 அன்று உறவுக்காரர் ஒருவரின் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த நடராஜூக்கு 20 ஆண்டு சிறை தண்டனை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடராஜை அழைத்துச் சென்றனர்.

Related Stories: