கோத்தகிரி சிஎஸ்ஐ பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

ஊட்டி:  கோத்தகிரி  சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலமையாசிரியர் (பொறுப்பு) சுப்பிரமணி தலைமை வகித்தார்.  பள்ளி தாளாளர் உதயகுமார் வாழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல்  மாவட்ட தலைவர் ராஜூ சிறப்பு கருத்தாளராக கலந்துக்கொண்டு பேசுகையில், கடந்த  மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இணைந்து விண்வெளியில் செலுத்திய ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் 2022ம் ஆண்டின்  மிகப்பெரிய அறிவியல் சாதனையாக கருதப்படுகிறது.

இந்த ஜேம்ஸ்வெல் டெலஸ்கோப்  சுமார் 6 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்டது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள லெக் ரான்ஜி 2 என்ற இடத்தில் சூரியனை வலம்  வரவுள்ளது. இது 1990ல் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஹப்புள் டெலஸ்கோப்பைவிட 100 மடங்கு திறன் கொண்டது.

ரூ.75 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும் இந்ந  ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் இந்த பிரபஞ்சத்தின் துவக்க காலநிலை, பூமி போன்றுள்ள  வெளிக்கோள்களை கண்டறிதல், அகச்சிவப்பு நிறமாலைகளை நம் கண்களால் காணும்  நிறமாலைகளாக மாற்றி இதுவரை மனித குலம் காணாத விண்வெளி பொருட்களை ஆய்வு  செய்து நமக்கு புதிய தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். தொடர்ந்து, பல அறிவியல் செய்திகளை படக்காட்சி மூலம்  விளக்கப்பட்டது. ஆசிரியர் பால் நன்றி கூறினார்.

Related Stories: