குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தில் நினைவு தூண் அமைக்க முடிவு

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தில் நினைவு தூண் அமைப்பதற்காக நேற்று அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கடந்த 8ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியிலிருந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் விபத்து ஏற்பட்ட இடத்தில் நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

மேலும் இந்தப்பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று குன்னூர் ராணுவ மையத்தை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் நினைவுத்தூண் அமைக்க ஆய்வு செய்து அளவீடு செய்தனர். விரைவில் பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: