×

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியிட்டார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியின் இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்டார். கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 339 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 41 திருநங்கைகள் உள்பட மெத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர்.

பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 690 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 36 பேர் என மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர். திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 151 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 303 பெண் வாக்காளர்களும் உள்ளனர். திருநங்கைகள் 27 பேர். மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 95 ஆயிரத்து 481 பேர்.

திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 வாக்காளர்கள் உள்ளனர். திருநங்கைகள் 29 பேர் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்களும் உள்ளனர். திருநங்கைகள் 66 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 121 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 113 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 105 திருநங்கைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 933 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 26 ஆயிரத்து 777 பெண் வாக்காளர்களும் 148 திருநங்கைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர்.

அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 408 பெண் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். திருநங்கைகள் 93 பேர் என 3 லட்சத்து 84 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். மாதவரம் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 734 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 754 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 112 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 600 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இங்கு திருநங்கைகள் 145 பேர் உள்ளனர். தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 17 லட்சத்து 54 ஆயிரத்து 162 ஆண் வாக்காளர்களும் 17 லட்சத்து 99 ஆயிரத்து 7 பெண் வாக்காளர்களும் உள்ளனர். திருநங்கைகள் 802 பேர் உள்ளனர். மொத்தம் 35 லட்சத்து 53 ஆயிரத்து 971 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடி விவரம்; கும்மிடிப்பூண்டியில் 330, பொன்னேரியில் 311, திருத்தணியில் 330, திருவள்ளூரில் 296, பூந்தமல்லியில் 387, ஆவடியில் 436, மதுரவாயலில் 440, அம்பத்தூரில் 349, மாதவரத்தில் 467, திருவெற்றியூரில் 311 ஆக மொத்தம் 3657 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

Tags : Tiruvallur District ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...