இவ்வாறு தெரி வித்துள்ளார். சிவகிரியில் சுகாதார பேரவை ஆய்வு கூட்டம்

சிவகிரி, ஜன. 6:  சிவகிரி ஸ்டெல்லா மேரீஸ் கல்வியியல் கல்லூரியில், மாவட்ட சுகாதார பேரவை சார்பில் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய், பிடிஓ ஜெயராமன், சுகாதார

ஆய்வாளர் சரபோஜி, மருத்துவ மேற்பார்வையாளர்கள் ரவிகுமார், இளங்கோ, ராசாராம், விஷ்ணுகுமார், மருத்துவ செவிலியர் கண்காணிப்பாளர் மஞ்சுளா, ஜெயசித்ரா, தகவல் உள்ளீட்டாளர் மகேந்திரன், நம்பிக்கை மையம் ஆற்றுநர் விஜயகுமார், காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனை, சிவகிரி, தென்மலை, வடமாலபுரம், தலைவன்கோட்டை, ராயகிரி, தேவிபட்டினம், புளியங்குடி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுற்றுச்சுவர், கூடுதல் படுக்கை வசதி, நோயாளிகளுக்கு காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலைய பஸ் வசதி, நோயாளிகளுக்கு தனித்தனி கழிவறை  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், காணொலி காட்சி வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: