ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற ராஜா எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு

சங்கரன்கோவில், ஜன. 6:  ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்து திரும்பிய ராஜா எம்எல்ஏவுக்கு, சங்கரன்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துருக்கியில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி  நடந்தது. இதில் இந்திய அணி சார்பில், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு 140 கிலோ எடை தூக்கும்  போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலுக்கு  வருகை தந்த அவருக்கு  பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து, மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து  மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கரன்கோவில் மெயின்  ரோட்டில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரை சந்தித்த ராஜா எம்எல்ஏ, அவர்களது வாழ்த்துகளை பெற்றுகள் கொண்டார். நிகழ்ச்சியில் மாணவரணி கார்த்தி,  வக்கீல் சதீஷ், ராஜா, ஓய்வுபெற்ற தாசில்தார் சூரியநாராயண மூர்த்தி,  சங்கர், ஜெயக்குமார், சபரிநாத், காவல்கிளி, மாரிக்குட்டி,  பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துருக்கியில் இருந்து சென்னை வந்த ராஜா எம்எல்ஏ, திமுக மாநில அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை இல்லத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் வாழ்த்து  பெற்றார்.

Related Stories: