இறுதி பட்டியல் வெளியீடு மன்னார்குடியில் 31, 32வது வார்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

மன்னார்குடி, ஜன. 6: தமிழகத்தில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த 4ம் தேதி சென்னை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதையடுத்து மன்னார்குடியில் உள்ள 33 வார்டுகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நேற்று முதல் துவங்கியது. அதில் ஒரு பகுதியாக 31 மற்றும் 32ம் வார்டுகளை சேர்ந்த 1350 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்ட துவக்க நிகழ்ச்சி மன்னார்குடி முதல் தெரு அங்காடியில் நேற்று காலை நடைபெற்றது. வட்ட செயலாளர்கள் தேவ சாமிதாஸ், பழனிச்செல்வன், வர்த்தக சங்க தலைவர் ஆர்வி ஆன ந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மனித உரிமை பிரிவு மாவட்ட அரசு வழக்கறிஞர் கலை வாணன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பை களை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வட்ட பிரதிநிதி அசோக், மகேந்திரன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: