கும்பகோணம் வடக்கு ஒன்றியத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கல்

கும்பகோணம், ஜன.6:கும்பகோணம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அங்காடிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முன்னிலை வகித்து 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: