திருமயம் அருகே இல்லம் தேடி கல்வி துவக்கம்

திருமயம். ஜன.6: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சி புறகரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர்(பொ) ராஜீவ்காந்தி மேற்பார்வையில் நடைபெற்ற வகுப்பு தொடக்க விழாவில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். காயத்ரி, ஆதி பாரதி ஆகியோர் இல்லம் தேடி கல்வி தன்னார்வலராக நியமிக்கப்பட்டனர். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: