அன்னவாசல் ஒன்றியக்குழு கூட்டம்

விராலிமலை, ஜன.6: அன்னவாசல் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கல்யாணி மாரிமுத்து, பிடிஓ சுவாமிநாதன், வேலு (கிஊ) முன்னிலை வகித்தனர். மேலாளர் கணேசன் வரவேற்றார். இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பேசிய கவுன்சிலர்கள் தற்போது பெய்த மழையினால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, தேவையான இடங்களில் சிறு பாலம் அமைக்க வேண்டும், அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மிதிவண்டி செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்றார். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர்கள் அடங்கிய புதிய கல்வெட்டு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நிறுவப்பட்டது. முடிவில் மேலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories: