×

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை அமைக்க ஏற்பாடு

பெரம்பலூர்,ஜன.6:பெரம்ப லூர் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட் டுப்பாட்டு அறைஅமைத்திட ஏற்பாடு. நடைபெறுவதாக ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர்  வெங்கடப்பிரியா தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொ ரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மா வட்டக் கலெக்டர் வெங் கடப்பிரியா தலைமை வகித்துப்பேசியதாவது: தமிழக அரசு கொரோணா பரவலை கட்டுப்படுத்த பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வார்-ரூம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மேலும் பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. டெஸ்ட் எடு த்தல், தனியார் மருத்துவம னைகளிலும், அரசு மருத்து வமனைகளிலும் படுக்கை வசதிகள் குறித்து பொதும க்களுக்குத் தெரிவித்தல், கொரோனா பாதித்தவர்க ளை பாதுகாப்பு மையங்க ளில் தங்க வைத்தல், அவர் களுக்கு அடிப்படை வசதிக ளை செய்து தருதல் உள்ளி ட்ட பல்வேறுபணிகள் மேற் கொள்ளப்பட்டது. அதுபோ ல தற்போதும் அதற்கான ஆயத்த பணிகளை மேற் கொள்ள வேண்டும்.கபசுர க் குடிநீர் வழங்கிட தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாவது அ லை பரவாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வே று துறைகள் ஒருங்கிணை ந்து மேற்கொள்ள வேண்டு ம் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, மருத்துவ நலப்பணிகள் திருமால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செ ந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், கலெக்டர் அலுவலக மேலாளர் சிவா மற்றும் பல் வேறு அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur District Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்