சீர்காழி, ஜன.6: சீர்காழி ஆர்டிஓ அலுவலகத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் முருகானந்தம், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ நாராயணன், சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதி புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குலோத்துங்கன், நகர துணை செயலாளர் பாஸ்கரன், அதிமுக நகர செயலாளர் வினோத், காங்கிரஸ் கட்சி நிர்வாகி குமார், பாஜக நகர தலைவர் சண்முகம், வழக்கறிஞர் நெடுஞ்செழியன், ரவி, சண்முகம் கலந்து கொண்டனர்.