×

கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை, ஜன.6: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் மழையினால் அழிந்துபோன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாய சங்கத்தினர் தடுப்புகளை தூக்கி எறிந்ததால் போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்தவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போராட்டத்தை ஒத்திவைத்து கலைந்து சென்றனர். கொள்ளிடம்: கொள்ளிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 ஆண்கள் 5 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பனார்கோவில்: செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் கட்சியின் விவசாய சங்க ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கட்சியின் துணை செயலாளர் சின்னதுரை உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்