×

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 9,053,94 வாக்காளர்கள்

கரூர், ஜன. 6: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2022ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளர் பட்டியல்களை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டார். அதன்படி அரவக்குறிச்சி தொகுதியில் ஆண் 102810, பெண் 112656, இதரர் 7 பேர் என 215473 வாக்காளர்கள் உள்ளனர். கரூர் தொகுதியில் 116791 ஆண்கள், 116791, பெண்கள் 130270, இதரர் 24 என 247085 வாக்காளர்கள் உள்ளனர்.கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 104454 ஆண்கள், 109992 பெண்கள், இதரர் 52 என 214498 வாக்காளர்கள் உள்ளனர். குளித்தலை தொகுதியில் 111149 ஆண்கள், 117180 பெண்கள், இதரர் 9 பேர் என 228338 வாக்காளர்கள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் 435204 ஆண்களும், 470098 பெண்களும், 92 இதர வாக்காளர்களும் என 905394 வாக்காளர்கள் உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அதில், அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும், தீர்வளிக்கும் வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும், வோட்டர் ஹெல்ப் என்ற மொபைல் செயலி மூலமாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

Tags : Karur district ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...