தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி, ஜன.6: தூத்துக்குடியில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி புதிய பேருந்துநிலையம் அருகில் வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மகளிரணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைசெயலாளர் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வர்த்தக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், அண்ணாநகர் துணைச்செயலாளர் பாலு, தகவல் தொழில்நுட்ப அணி மார்கின் ராபர்ட், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், துணை அமைப்பாளர்கள் தொண்டரணி ராமர், மீனவரணி சேசையா, மாணவரணி பால்மாரி, வட்டசெயலாளர்கள் டென்சிங், சண்முகராஜ், முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், போல்பேட்டை பிரபாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் தென்பாகம் காவல்நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை முன்பு இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் தலைமையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி தலைமையில் சேர்வைகாரன்மடம் தங்கம்மாள்புரத்தில் ஏழைகளுக்கு தையல், சலவை இயந்திரம், இலவச சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி அற்புதம் மருத்துவனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் ஜேம்ஸ் சுந்தர்சிங், மதன், முத்துலட்சுமி, சீனிவாசன், அனிஷ் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். பின்னர் கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, அவைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், ராஜ்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஜெயராஜ், சேர்வைகாரன்மடம் ஊராட்சி துணைத்தலைவர் ஜெனிட்டா ஜெபஸ்டின், இளைஞரணி செயலாளர் சண்முகநாராயணன், கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளர் கே.பி.ராஜாஸ்டாலின், ஆதிதிராவிட அணி  அமைப்பாளர் மணிகண்டன், மகளிரணி நிர்வாகிகள் வரலட்சுமி, ஜெயா மெர்லின், தவசுந்தரி, வேதசெல்வி, ஹேமா, சேர்வைகாரன்மடம் செயலாளர்கள் ஜெயகுமார், சுகுமார், பாலையா, நாராயணன், பர்னபாஸ், குமாரகிரி செயலாளர் இசக்கிமுத்து, புதுக்கோட்டை சைமன், மொபர்ட் ராஜன், ஞானராஜ், மறவன்மடம் செயலாளர் சிவராஜ், சமூக ஆர்வலர் ஜெபஸ்டின் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இந்திராநகர் பகுதி செயலாளர் சிவகுமார் தலைமையில் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டிடிசி.ராஜேந்திரன் இனிப்பு வழங்கினார். இதில் வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, அவைத்தலைவர் ராஜசேகர், இளைஞரணி புவனேஷ், தெய்வேந்திரன், அலெக்ஸ், கார்த்திக்கேயன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக  செயலாளரான சண்முகையா எம்எல்ஏ சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு  புளியம்பட்டி, கே.கைலாசபுரம் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு வேஷ்டி,  சேலை மற்றும் மதிய உணவுகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்  வழங்கினார். இதேபோல் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  கொண்டாடினர். நிகழ்ச்சியில் அக்கநாயக்கன்பட்டி, கொடியன்குளம் பஞ்சாயத்து  தலைவர்கள் அய்யாத்துரை, அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயாமுருகன்,  ஓட்டுடன்பட்டி செயலாளர் இளங்கோ, கொடியன்குளம் செயலாளர் ராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக  சார்பில் குறுக்குச்சாலையில் நடந்த கனிமொழி எம்பி பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு  ஒன்றிய செயலாளரும் யூனியன் துணை சேர்மனுமான காசிவிஸ்வநாதன் தலைமை வைத்து  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், தூய்மைப் பணியாளருக்கு அரிசி, காய்கறி  வழங்கினார். இதில் தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்வேல்,  மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ராஜா, யூனியன் கவுன்சிலர் வெள்ளைச்சாமி,  கல்மேடு ராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் முத்துக்குமார், சண்முகையா, சந்தனராஜ்,  நிர்வாகிகள் ஹரி பாலகிருஷ்ணன், அய்யம்பிள்ளை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவில்பட்டி : கோவில்பட்டியில் நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், தவமணி, பரமசிவம், சூர்யராஜ், இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாணவரணி துணை அமைப்பாளர் கணேசன், நகர அவைத்தலைவர் முனியசாமி, நகர துணைச்செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், புஷ்பராஜ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் இரா.மணி, முன்னாள் நகர செயலாளர் சிவா, வக்கீல் அழகர்சாமி, சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மகளிரணி ராஜலட்சுமி, சரமாரி சந்திரன், சண்முகலட்சுமி, இந்துமதி, விஜயலட்சுமி, கஸ்தூரி, தமிழ்ச்செல்வி, மாரியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முடுக்குமீண்டான்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜன், வழக்கறிஞரணி அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி ஜெயக்கண்ணன், சுந்தரேஸ்வரி அசோக்குமார், பாரதி, மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மாரீஸ்வரன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரக்கண்ணன், செல்வமணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பழனிகுமார், கிளைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், புவனேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் கனகராஜ், மாதேஸ்வரன், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனர் தேன்ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: