கோவில்பட்டி நேஷனல் இன்ஜி. கல்லூரியில் மாநில வினாடி வினா போட்டி ஒத்திவைப்பு

கோவில்பட்டி, ஜன.6: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நாளை (7ம்தேதி) நடக்கவிருந்த மாநில அளவிலான வினாடிவினா போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை (7ம்தேதி) கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற இருந்த 7வது மாநில அளவிலான வினாடி வினா போட்டி, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மேலும் இவ்வினாடி வினா போட்டி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: