×

தேவிகாபுரம் ஊராட்சியில் ₹40 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு, ஜன.6: மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் 14வது நிதிக்குழு மானியத்தின் கீழ், மூகாம்பிகை நகரில் ‘பவர் பிளாக்’ சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், வாரச்சந்தை வளாகம், சுகாதார வளாகம், கடைமேடைகள் ஆகிய பணிகளும் நடந்து வருகிறது. மொத்தம் ₹40 லட்சம் செலவில் நடந்து வரும் இப்பணிகளை, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் மல்லிகா திருநாவுக்கரசு மற்றும் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தற்போது வாரச்சந்தை பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் சேத்துப்பட்டு-போளூர் சாலையின் இருபுறமும் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாரச்சந்தையில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து வரும் பொங்கல் பண்டிகைக்குள் அதே இடத்தில் மீண்டும் வியாபாரம் தொடங்குதவற்கு ஏற்ப பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Tags : Devikapuram ,
× RELATED பழைய பிரியாணியை சூடு செய்து புதிய...