இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் மாணிக்கம் நூற்றாண்டு விழா

நீடாமங்கலம்,ஜன.5: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் மாணிக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் நகர கிளையில் 26 வது மாநாடு ஒன்றியக்குழு உறுப்பினரும் மாவட்ட குழு பாரதிமோகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை வாழ்த்தி நாகை எம்பி செல்வராஜ் அரசியல் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராவணன்,ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் நீடாமங்கலம் நகர செயலாளராக பாரதிமோகன், துணை செயலாளராக ஜீவா தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நீடாமங்கலத்தில் குட்செட்டில் நெல் மூட்டைகளைஏற்றுவதற்கு ரயில்வே நிலைய கீழ்ப்பகுதி வெண்ணாற்றங்கரை ரயில் தடம் அமைத்திட வேண்டும். வையகளத்தூர் வெண்ணாற்று சிமெண்ட் பாலம் வரை பொதுமக்கள் சென்று வர புதிய சாலை அமைத்திட வேண்டும். நீடாமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: