×

விவசாயிகள் நல உரிமை சங்கம் வலியுறுத்தல் முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு மழையால் சாய்ந்து சேதமான நெல் சாகுபடி பரப்புகள் கணக்கெடுப்பு செய்யப்படும்

முத்துப்பேட்டை,ஜன.5: முத்துப்பேட்டை வட்டாரத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா தாளடி நெல் பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. அவ்வாறு மழையினால் சாய்ந்த நெல் சாகுபடி பரப்பினை நேற்று முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தலைமையில் அதிகாரிகள் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எக்கல், குன்னலூர், எடையூர், வடசங்கேந்தி, மருதவனம், மாங்குடி போன்ற கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது: சமீபத்தில் டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா தாளடி நெல் பயிர்கள் மழை காரணமாக சாய்ந்து மகசூல் இழப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி இதுவரை காணப்படாத வகையில் மழை பெய்ததால் நெல் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 13,500 எக்டேர் நிலப்பரப்பில் நெல் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான சாகுபடி பரப்பில் நெல் பயிர்கள் சாய்ந்து காணப்படுகிறது. விவசாயிகள் வாய்ப்புள்ள இடங்களில் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வயலில் உள்ள தண்ணீரை வடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாய்ந்து போன நெல் பயிர்களை முடிந்தவரை நிமிர்த்தி ஒன்றுடன் ஒன்று கட்டி மேலும் சாயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழையின் காரணமாக சாய்ந்து சேதமாகி உள்ள நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்புகள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு செய்யப்படும்.

எனவே விவசாயிகள் தங்களது வயல்களில் மகசூல் இழப்பினை மேலும் குறைத்திடும் பொருட்டு மேற்சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து விபரங்கள் தேவைப்படும் விவசாயிகள் முத்துப்பேட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது முத்துப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் காத்தையன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கதிரேசன், கதிர், ஹேமாவதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் யசோதா செல்வம், ராஜா, மாங்குடி, வட சங்கேந்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags : Farmers' Welfare Rights Association ,Muthupet ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம்