கரூர் கொங்கு கல்வி அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கரூர், ஜன. 5: கரூர் கொங்கு கல்வி அறக்கட்டளை சார்பாக இயங்கும் கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் அட்லஸ் கலையரங்கம், கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி, கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதன்படி கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவராக அட்லஸ் எம்.நாச்சிமுத்து, செயலாளராக விசா சண்முகம், பொருளாளராக பிரேம் வீரப்பன், துணைத்தலைவராக கே.அம்மையப்பன், இணைச் செயலாளராக மீனாட்சி ரமேஷ் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு புதிய நிர்வாகிகளும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்,

Related Stories: