கொரோனா ஒமிக்ரான் பரவல் எதிரொலி வெளியே வரும் போது மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் அரவக்குறிச்சி போலீசார் எச்சரிக்கை

அரவக்குறிச்சி, ஜன. 5: கொரோனா ஒமிக்ரான் பரவலையடுத்து மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரவக்குறிச்சி போலீசார் எச்சரித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3 வது அலை ஆரம்பமாகியுள்ளது. இதனால் கொரோனா ஒமிக்ரான் தொற்று வேகமாக வரும் நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவுறுத்தி வருகின்றது. இதில் மாஸ்க் அணிவது, சமூக இடை வெளியை கண்டிப்பாக கடைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் போலீஸ் வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் மூலம் எடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் கரூர் எஸ்பி உத்தரவின்படி அரவக்குறிச்சி ஓன்றியம் மற்றும் அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் பைக், கார், பஸ்களை நிறுத்தி இது பற்றி அறிவுறுத்தி வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் ஏவிஎம் கார்னரில் பைக், கார், பஸ்களை நிறுத்தி தற்போது நாடு முழுவதும் 3வது அலை ஆரம்பமாகியுள்ளது.இதனால் கொரோனா ஒமிக்ரான் தொற்று வேகமாக வரும் நிலை உள்ளது.   கொரோனா ஒமிக்ரான் தொற்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடை வெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரவக்குறிச்சி போலீசார், பொதுமக்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Related Stories: