×

கரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 1,021 தன்னார்வலர்கள் நியமனம்

கரூர், ஜன. 5: கரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 1,021 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பிரபுசங்கர் கூறினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை அரசு ஆரம்ப பள்ளி அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வர் உத்தரவுன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியை தவிர்க்கவும், கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்காத காலங்களில் பள்ளிக்கு செல்வதால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கல்வி இழப்புகளை போக்கவும், மாணவர்களின் வீட்டுக்கே சென்று தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.

அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலோடு கரூர் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மொத்தம் 1,021 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு தன்னார்வலர் வீதம் 1,021 தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உள்ளார்கள்.கல்வியே மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படை. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயேந்திரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Karur district ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...