கழுகுமலை ரைஸ் மில்லில் 1.750 டன் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

கழுகுமலை, ஜன. 5: கழுகுமலையில் ரைஸ் மில்லில் 1.750 டன் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைதுசெய்தனர்.  கழுகுமலை பகுதியில் உள்ள ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கழுகுமலை எஸ்ஐ காந்திமதி தலைமையில் தனிப்பிரிவு காவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார் கழுகுமலை ஏ.பி.சி. நகரில் உள்ள ரைஸ்மில்லில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு 50 கிலோ எடை கொண்ட 35 மூடைகளில் 1.750 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரைஸ் மில் உரிமையாளரான ஏ.பி.சி நகரை சேர்ந்த சுப்பையா மகன்  பரமசிவம் (45) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதலான ரேஷன் அரிசி மூடைகளையும் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: