×

கன்னியாகுமரியில் 5வது நாளாக படகுசேவை பாதிப்பு

கன்னியாகுமரி, ஜன.5: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கடந்த 31ம் தேதி இரவு முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் கடந்த 1, 2ம் தேதிகளில், சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கன்னியாகுமரியில் புத்தாண்டையொட்டி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் படகுசேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்  மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ெசல்ல, பூம்புகார் கப்பல்  ேபாக்குவரத்து கழக படகுகள் இயக்கப்படவில்லை. நேற்றுமுன்தினம் 4வது நாளாக கடல்காற்று காரணமாக படகுசேவை ரத்தானது.
இந்நிலையில் நேற்று காலை கடலில் சூறைக்காற்று வீசியதால் 5வது நாளாக படகுசேவை தொடங்கப்படவில்லை. இதனால் ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் மதியம் 1 மணியளவில் கடல்காற்றின் வேகம் குறைந்ததையடுத்து படகுசேவை தொடங்கியது. 5 நாட்களுக்கு பிறகு படகுசேவை நடந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!