நாகர்கோவிலில் வைத்தியசாலை நடத்தி வந்தவர் தற்கொலை மனைவி இறந்த 2 மாதத்தில் சோகம்

நாகர்கோவில், ஜன.5:  நாகர்கோவிலில் வைத்தியசாலை நடத்தி வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் அசோக்குமார் (69). இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே ஆயுர்வேத வைத்தியசாலை நடத்தி வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன் அசோக்குமாரின் மனைவி மரணம் அடைந்தார். இதனால் மனம் உடைந்த நிலையில் அசோக்குமார் இருந்துள்ளார். உறவினர்களிடமும் சரியாக பேச வில்லை. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி, நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அசோக்குமார் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம்,  கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில், சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார். இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அசோக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது மகள் பிரியதர்சினி அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சத்யசோபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்திருப்பாரா? அல்லதுவேறு பிரச்னைகள் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அவரது செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories: