×

போளூர் ஒன்றியத்தில் ₹1 கோடியில் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு


போளூர், ஜன.5: போளூர் ஒன்றியத்தில் ₹1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு செய்தார். போளூர் ஒன்றியம் வெள்ளூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் உறிஞ்சி குழாய் அமைக்கும் திட்டத்தினை கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் நேற்று முன்தினம் பார்வையிட்டார். வாழியூர் கிராமத்தில் ₹23 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்குபடியும் உத்தரவிட்டார். குப்பம் கிராமத்தில் ₹10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிட பணியினை பார்வையிட்டார். அனந்தபுரம் கிராமத்தில் ₹16.83 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் எரி மேடை, காரிய மேடை, தடுப்பு சுவர், கைபம்பு, சிமென்ட் சாலை போன்ற பணிகளை பார்வையிட்டார்.

இதே போல் படவேடு பகுதியில் ₹22 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் பேசுகையில், 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள பணிகள், இதுவரையில் தொடங்கப்படாமல் உள்ள பணிகள், அதற்காண காரணங்கள் குறித்து ஆய்வு செய்தார். தொடங்கப்படாத பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், முடிக்கப்படாத நிலையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என ஊராட்சி செயலாளர்களை எச்சரித்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் பெ.சாந்திபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெ.பாபு, மு.பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் மு.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் க.தீபா கலைவாணன், வெ.கீதாவெங்கடேசன், மு.அனிதாமுரளி, ஆர்.சீனுவாசன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் இருந்தனர்.

Tags : Polur Union Additional Collector Inspection ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...