×

ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் சாதனை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே நோபிள் மெட்ரிக் பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு நடந்தது. இதில் அருப்புக்கோட்டை எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் கங்கா, லீலாராணி, சங்கரேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாணவிகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் கனகராஜ், தலைவர் செந்தில்முருகன், தலைமையாசிரியை தங்கரதி ஆகியோர் பாராட்டினர்.

Tags : Arupakkota ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...