சிவகாசியில் சிறார்களுக்கு 28 மையங்களில் தடுப்பூசி முகாம்

சிவகாசி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை நேற்று முதல் தமிழகம் முழுவதும் 15 வயது முதல், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் துவங்கியது. சிவகாசி பகுதியில் நேற்று முன்தினம் 9 மையங்களில் நடைபெற்ற முகாமில் 1,612 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 28 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்ற முகாமை சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான விவேகன்ராஜ் துவங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார், துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: