×

சிவகாசி பஸ்நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகளுக்கு இடையூறு

சிவகாசி: சிவகாசியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பஸ்நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு நகர பஸ்கள், 30க்கும் மேற்பட்ட அரசு புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றன. பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ்நிலையத்தில் உள்ள காலியிடங்களில் பழக்கடை, பெட்டிக்கடை அமைத்துள்ளனர். இவர்கள் பஸ்கள் நிற்கும் இடங்களில் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். மேலும், பஸ் நின்று செல்லும் இடங்களில் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால், பஸ்கள் பஸ்நிலையத்தின் மைய பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. மாநகராட்சி நிர்வாகம் பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், டூவீலர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஸ்கள் வெளியே ஓட்டிச்செல்ல டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள ‘பஸ் பே வளாகம்’ பஸ் கட்டண முன்பதிவு மையம், டைம் கீப்பர் ஸ்டால்கள் அருகே டூ வீலர், சைக்கிள்களை வழக்கமாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், பஸ்நிலையத்தில் கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே, பஸ்நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து