×

குமுளியில் போக்குவரத்து மாற்றம்

கூடலூர்:  குமுளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்ட மாநாடு நடக்கிறது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார். இதையொட்டி, சபரிமலையில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக எல்லைப்பகுதியான குமுளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று குமுளியில் நடக்கும் கூட்டத்தில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகிறார். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குமுளியில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சபரிமலையில் இருந்து தமிழகம் திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் குட்டிக்கானத்தில் இருந்து கட்டப்பனை, கம்பம்மெட்டு வழியாக செல்லும்படி இடுக்கி மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளது.

Tags : Kumuli ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க...