×

புதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம்

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய புதிய கொள்கையை கைவிட வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி உள்ள நிலையில், புதிய கொள்கை குறித்த தவறான தகவல்களை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய கொள்கை, பேஸ்புக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதை அனுமதிப்பது அல்ல. வெளிப்படைத்தன்மை, தொழில்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துதலை வழங்குவதே எங்கள் நோக்கம். புதிய கொள்கை குறித்த தவறான தகவல்களை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எல்லா கேள்விக்கும், சந்தேகத்திற்கும் எங்களிடம் விடை உண்டு,’’ என்றார்….

The post புதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,New Delhi ,government ,
× RELATED உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் வாட்ஸ்அப்...