சுகாதாரப் பேரவை கலந்தாய்வுக் கூட்டம்

கம்பம்: கம்பம் நகராட்சி அலுவலகத்தில், வட்டார அளவிலான மாவட்ட சுகாதாரப் பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தப்படவும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில்  சமூக ஆர்வலர் அபி, ‘நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதாக புகார் தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

நாராயணத்தேவன்பட்டி தலைவர் பொன்னுத்தாய் பேசுகையில், ‘ஊரின் நுழைவுப் பகுதியில் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை அகற்றுவதற்கு, மாவட்ட நிர்வாகம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் கூடலூர், கம்பம்,  க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்,  அனைத்து சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், பல்துறை சார்ந்த  அலுவலர்கள், 5 ஊராட்சி தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளை  நிர்வாகிகள் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ்  பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குழந்தைகள்  வளர்ச்சி திட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,  கலந்து கொண்டனர்.

Related Stories: