×

இளையான்குடி பகுதியில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தமிழரசி எம்எல்ஏ வழங்கினார்

இளையான்குடி: இளையான்குடி அருகே கண்ணமங்கலம், திருவள்ளூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை, ரேசன் அட்டை காரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு துனைப் பதிவாளர் பாரதி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் சுப. மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திரா ரெங்கநாதன், மலை ராஜ், கருப்பணன், மாவட்ட நெசவாளர் அணி சாரதி, மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், ஒன்றிய பொறுப்பாளர் மலைமேகு, ஜெயராமன், சேதுபதி துரை, அழகு, அர்ச்சுணன், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Ilayankudi ,Tamilarasi MLA ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை