×

கொடைக்கானல் ஏரி ரூ.24 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தகவல்

கொடைக்கானல்:கொடைக்கானல்  நகராட்சியில் பல்வேறு திட்டங்களில் கீழ் ரூ.18.46 கோடியில் மேம்பாட்டு  திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. ஆர்டிஓ முருகேசன் தலைமை வகிக்க,  நகராட்சி ஆணையாளர் நாராயணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராகிம்  முன்னிலை வகித்தனர். திட்ட பணிகளை ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கி  வைத்து பேசியதாவது: கொடைக்கானலில் தற்போது ரூ.18.46 கோடியில் மேம்பாட்டு  பணிகள் துவங்கியுள்ளன.  அடுத்து ரூ.32.87 கோடியில் மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.  நகராட்சி பகுதியில் 29 சாலைகள் மேம்படுத்தப்படும். குடிநீர் தேக்க அணையில்  ரூ.48 லட்சம் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

கொடைக்கானல்  ஏரி மேம்பாட்டிற்கு தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில்  பணிகள் துவங்கும். மேலும் ஏரியை சுற்றி 600 மின்விளக்குகள் ரூ.4 கோடியில்  அமைக்கப்படும். அண்ணா சாலையிலுள்ள காய்கறி மார்க்ெகட் ரூ.31/2 கோடியில்  ேமம்படுத்தப்படும். மன்னவனூரில் கூட்டுறவு மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரூ.88  கோடியில் 20 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும். நீண்டநாள் கோரிக்கையான கல்லூரி  அடுத்த ஆண்டு துவக்கப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். 5  ஆண்டுகளில் கொடைக்கானலுக்கு மட்டும் ரூ.300 கோடி அளவிற்கு திட்டங்கள்  நிறைவேற்றப்படவுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றிய பின் சர்வதேச  சுற்றுலா மையமாக ெகாடைக்கானல் விளங்கும்’ என்றார். தொடர்ந்து எம்எல்ஏ  ெபாங்கல் பரிசு தொகுப்பு, விபத்து இழப்பீடு, முதியோர் உதவித்ெதாகை  உள்ளிட்டவை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பேரிஜம்  சுற்றுலா பகுதிகளையும் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Tags : Kodaikanal Lake ,IP ,Senthilkumar ,
× RELATED முதலியார்பேட்டையில் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது