சுற்றுலா பயணி டூவீலரில் திடீர் தீ ெகாடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பிளீஸ் வில்லா பகுதி வழியாக நேற்று விருதுநகரை சேர்ந்த சுற்றுலா பயணி விக்னேஷ் என்பவர் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது திடீரென  இவரது டூவீலர் கீழே விழுந்ததில் தீப்பற்றி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், டூவீலரை விட்டு விட்டு ஓடிவிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் டூவீலரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும் தீயில் டூவீலர் முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: