×

பாலாறு- பொருந்தலாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: பழநி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி: பழநி பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாய பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர், தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினார். இதன் பயனாக அணையில் இருந்து நீர் திறப்பு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.


இதன்படி நேற்று பாலாறு- பொருந்தலாறு அணையின் புதிய ஆயக்கட்டு பாசன (இடது பிரதான கால்வாய்) பரப்பிற்கு முறைப்பாசனத்திற்கு நேற்று நீர் திறப்பு செய்யப்பட்டது. வரும் ஏப்ரல் 24ம் தேதி வரை நாளொன்றிற்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் 25.28 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்மூலம் பழநி பகுதியில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Palaru-Poruntalaru Dam ,Palani ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்