முனியப்பன் கோயில் விழா

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள சக்தி முனியப்பன் கோயில் விழா நேற்று நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி நேர்த்திக் கடனாக பலியிட்டனர். இதையொட்டி, குமாரசாமிபேட்டை மகா மாரியம்மன் கோயிலில் இருந்து, பம்பை வாத்தியம் முழங்க சீர் வரிசை கொண்டு படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: