×

ஊட்டி நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவத்துவங்கியது.  இதைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று வேகம் எடுக்கவே, இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. அனைத்து மக்களும் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், கை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன. மேலும், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று சற்று குறைந்த போதிலும், தொடர்ந்து விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வந்தது. மேலும், ஊட்டி நகராட்சி நிர்வாகமும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தது. நகர் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஊட்டியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது தடுப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஊட்டி நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Tags : Ooty municipality ,
× RELATED ஊட்டி நகராட்சி அணைகளில் தண்ணீர்...