×

முதுமலை - மசினகுடி சாலையில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை விழும் உறைபனியால் தேயிலை செடிகள் மட்டுமின்றி, வனப்பகுதிகளில் உள்ள சிறிய செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் காய்ந்து விடும். இது போன்ற சமயங்களில் வனத்தில் தீ ஏற்படுவது வழக்கம். இதைத்தடுக்க, வனத்துறை சார்பில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில், சாலையோரங்கள் மற்றும் வனங்களில் தீத்தடுப்பு கோடுகளை ஆண்டு தோறும் அமைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், கோடை காலத்தில் வனங்களில் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி முதல் முதுமலை மற்றும் தெப்பக்காடு வரை சாலையோரங்களில் தற்போது தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதேபோல், முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட தெப்பாடு - கூடலூர் சாலைகளிலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி கோட்டம் மற்றும் கூடலூர் ஆகிய கோட்டங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

Tags : Mudumalai - ,Machinagudi road ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்