நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர் காணல்

ஊட்டி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நேர் காணல் நடக்கிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளிடம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஜன.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது.  இவ்விரு பொறுப்புகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 8ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி நகரம் மற்றும் சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்டவர்களுக்கு நேர் காணல் நடக்கும்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பிக்கட்டி, கீழ்குந்தா, கேத்தி ஆகிய பேரூராட்சிகளுக்கான நேர் காணல் நடக்கும். 9ம் தேதி ஜெகதளா, உலிக்கல், கோத்தகிரி பேரூராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு காலை 11 மணிக்கு நேர் காணல் நடக்கும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு குன்னூர் நகரம், அதிகரட்டி பேரூராட்சியை சேர்ந்தவர்களுக்கு நேர் காணல் நடக்கும்.

10ம் தேதி காலை 11 மணிக்கு கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நேர் காணல் நடக்கும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு தேவர்சோலை, ஓவேலி மற்றும் நடுவட்டம் பேரூராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேர் காணல் நடக்கும்.

இதில் கலந்துக் கொள்பவர்கள், பரிந்துரையாளர்களை உடன் அழைத்து வரக்கூடாது. மேலும், நேர்காணலின் போது, தாடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அந்தந்த நகர, ஒன்றியங்களுக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்தில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: