×

குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

புழல்: சோழவரம் பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சிறப்பு பரிசு ெதாகுப்பை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், மளிகை சாமான்கள் மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் தரமான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி, இதனை தொடங்கியுள்ளார். இதேபோன்று, அனைவருக்கும் தரமான பொருட்கள்  கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், பொன்னேரி துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந் தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவடி: ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர் 4வது தெரு சுமார் 2 கிமீ தூரம் கொண்டது. இங்கு, நூற்றுக்கணக்கான வீடுகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த தெரு, காமராஜர் நகர் மெயின் ரோட்டையும், ஆவடி - பூந்தமல்லி சாலையையும் இணைக்கிறது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக, இச்சாலை முறையாக பராமரிக்காமல் குண்டும், குழியுமாக கிடந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதுதொடர்பாக, தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளிதத்னர். இதையடுத்து, சமீபத்தில் அவர் சாலையை நேரில் ஆய்வு செய்து, அந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காமராஜ் நகர் 4வது தெருவில் உள்ள சாலையை சீரமைக்க ₹2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து, சாலை பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். அப்போது, நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாநகர திமுக செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர் எம்.குமார் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Minister ,S.M.Nasser. ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...