×

ராஜபாளையத்தில் மாடிதோட்ட தளைகள் வழங்கல்

ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்த பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் மாடிதோட்ட தளைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு தளையில் செடி வளர்க்க உதவும் 6 பாலித்தீன் பைகள், 2 கிலோ எடையுள்ள 6 தென்னை நார்க்கழிவு கட்டிகள், காய்கறி விதை பாக்கெட்டுகள் இருந்தன. இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை தோட்டக்கலை மாணவிகள் கலந்து கொண்டனர்.

தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி வழங்கினார். இதில் தோட்டக்கலை பயிலும் மாணவிகள் ஹரிணி, கயல்விழி, கார்த்திகா, அபிநாஸீ, முத்தமிழ் செல்வி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...