×

சிவகாசி மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

சிவகாசி: உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வருகிறது. வெளிநாடுகளில் தினசரி லட்சக்கணக்கில் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரனா ெதாற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சிவகாசியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகாசி பகுதியில் மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 60 சதவீதம் மக்களுக்கு இரண்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தால் சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்து பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ‘சிவகாசி மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது வரை கொரனா தொற்று யாருக்கும் பரவில்லை. ஓட்டல்கள், தங்கும் வீடுதிகள் அரசின் விதிமுறைபடி செயல்படுகிறதா என கண்காணித்து வருகிறோம். மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Sivakasi Corporation ,
× RELATED சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு;...