காளையார்கோவில்,தேவகோட்டையில் மாணவர்களுக்கு தடுப்பூசி பணி துவக்கம்

காளையார்கோவில்:  காளையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று 15 வயதுக்கு மேல் 19 வயது மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராகவேந்திரன், மருத்துவ அலுவலர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர், செவிலியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதேபோல் சூசையப்பர்பட்டிணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் தலைமையில், மருத்துவ குழு தேவகோட்டை நகராட்சி 6வது வார்டு உயர்நிலைப்பள்ளி, புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவேகம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புளியால், முப்பையூர், உயர்நிலைப்பள்ளி, சருகணி புனித பால் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் திவ்யா பிரபு, கவுன்சிலர் உதயசூரியன். முன்னிலை வகித்தனர். தடுப்பூசி முகாமில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்த பிறகு, தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories: