×

வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா

சிவகங்கை:  சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 292வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை காளையார்கோவில் சாலையிலுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, எஸ்பி செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சிவகங்கை இளையமன்னர் மகேஷ்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்எல்ஏ மாலை அணிவித்தனர். பிஜேபி சார்பில் மாநிலத்தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்தி
ரன் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், வட்டாரத்தலைவர் மதியழகன் வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Velunacharya ,
× RELATED 'வேலுநாச்சியாரின் வீரமும்,...