×

திருப்புத்தூரில் 7 பேர் கைது

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே புதுப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூர் அருகே புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருப்புத்தூர் புதுத் தெருவைச் சேர்ந்த கரிகாலன்(41), தம்பிபட்டி தட்சணாமூர்த்தி (30),மேட்டுப்பட்டி அஜித்குமார் (26), புதுப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஆனந்த்(45), பாண்டி செல்வம் (34), வெற்றிவேல்(45), அசுகட்டு தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (53) ஆகிய 7 பேர் மீதும், திருப்புத்தூர் நகர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

Tags : Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்