×

மாநகரில் 30,585 சிறுவர்களுக்கு தடுப்பூசி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலம்: சேலம் மாநகரில் 96 பள்ளிகளை சேர்ந்த 30,585 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனாவின் புதிய வடிவமாக உருமாறியுள்ள ஓமிக்ரான் தொற்றுவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 1,61500 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 30வது வார்டு கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமினை மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் உள்ள96 பள்ளிகளை சேர்ந்த 13,427 மாணவர்கள், 17,157 மாணவிகள் என மொத்தம் 30,585 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த முகாம் 8ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும்,’’ என்றார்.ஆய்வின் போது மாநகர அலுவலர் யோகானந்த் மற்றும் சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது