×

கொல்லிமலை மலைப்பாதையில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஓவியம்

சேந்தமங்கலம்: சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு, அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதிக அளவில் டூவீலரில் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களில் பலர், மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் வனப்பகுதிக்குள் சென்று மது அருந்தி விட்டு, வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

இதனால் வளைவுகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறை சார்பில், மலைப்பாதையின் 70 கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவர்களில், மது குடித்தால் ஏற்படும் விளைவுகள், விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் விபத்துகள் குறையும் என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : Kollimalai hills ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு